ஷாக்கிங் நியூஸ்! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! நடந்தது என்ன? தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை அடுத்து மொத்தம் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார். இதில், அதிகபட்சமாக தருமபுரியில் 81.48 சதவீதமும், கள்ளக்குறிச்சியில் 79.25  சதவீதமும், பெரம்பலூரில் 77.37 சதவீதமும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.10 சதவீதமும், தென் சென்னையில் 54.27 சதவீதம் பதிவாகி இருந்தன. 

Lok Sabha Election 2024... Confusion in vote percentage in Tamil Nadu tvk

தமிழகத்தில் பதற்றமான வாக்கு சாவடி மற்றும் விஐபி போட்டியிட்ட தொகுதிகளிலும் வாக்கு சதவீதத்தில் பெரும் மாறுபாடு ஏற்பட்டுள்ளது குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளிலும், ஒரே கட்டமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை 7 மணி முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசைகளில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்நிலையில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் தேர்தல் ஆணையம் சார்பில் எவ்வளவு வாக்கு சதவீதம் என்ற தகவலை வெளியிட்டிருந்தது. 

இதையும் படிங்க: Udhayanidhi: சனாதனம் குறித்து பேசிய உதயநிதியை விடக்கூடாது.. நிச்சயம் தண்டிக்கணும்! காங்கிரஸ் முதல்வர் அதிரடி!

இறுதியில் 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை அடுத்து மொத்தம் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார். இதில், அதிகபட்சமாக தருமபுரியில் 81.48 சதவீதமும், கள்ளக்குறிச்சியில் 79.25  சதவீதமும், பெரம்பலூரில் 77.37 சதவீதமும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.10 சதவீதமும், தென் சென்னையில் 54.27 சதவீதம் பதிவாகி இருந்தன. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்ததை விட இந்திய தேர்தல் ஆணையம்  சுமார் 3 சதவீதம் வாக்கை குறைத்து அறிவித்திருப்பது அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக மத்திய சென்னையில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 67.35 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக கூறியிருந்த நிலையில் தற்போது  13.44 சதவீதம் குறைந்து மத்திய சென்னையில் 53.91 சதவீதம் மட்டுமே பதிவாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தென் சென்னையில் 67.82  சதவீதமாக இருந்த வாக்கு 54.27 சதவீதம் வாக்குகளும், வட சென்னையில் 69.26 சதவீதமாக இருந்த வாக்கு 60.13 சதவீதமும், கோவையில் 71.17 சதவீதமாகவும், தூத்துக்குடியில் 70.93 சதவீதமாக இருந்த வாக்கு 59.96 சதவீதமாகவும் குறைந்துள்ளது. 

இதையும் படிங்க: School College Holiday: தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

அதேபோல், நெல்லையில் 70.46 சதவீதமாக இருந்த வாக்கு 64.10 சதவீதமாகவும், கன்னியாக்குமரியில் 70.15 சதவீதமாக இருந்த வாக்கு 65.46 சதவீதமாகவும், ஸ்ரீபெரும்பத்தூரில் 69.79 சதவீதமாக இருந்த வாக்கு 60.21 சதவீதமாகவும், ராமநாதப்புரத்தில் 71.05 சதவீதமாக இருந்த வாக்கு 68.18 சதவீதமாகவும், தேனியில் 71.74 சதவீதமாக இருந்த வாக்கு 69.87 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதேபோல், பதற்றமான வாக்கு சாவடிகளிலும் விஐபி போட்டியிட்ட தொகுதிகளிலும் வாக்கு சதவீதத்தில் பெரும் மாறுபாடு இருக்கிறது. இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் பதிவான மொத்த வாக்குகளின் சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios