சென்னை எழும்பூர் அரசு பள்ளியில் முதல்வர் பழனிசாமி எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி மழலையர் வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

பல்வேறு அரசு பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் மழலையர்  வகுப்புகள் தொடங்கப்பட்டன. மேலும் எல்கேஜி வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்காக பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம்  காட்டினார். மேலும் இன்று வகுப்பில் சேர்ந்த மழலைகளுக்கு,சீருடை காலணி பாட நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில்,ஜெயக்குமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் 2381 அங்கன்வாடிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.