Jawahirullah Vs Irfan: இந்த விஷயத்துல கருணையே காட்டாதீங்க! இர்பான் மீது ஆக்ஷன் எடுங்க முதல்வரே! ஜவாஹிருல்லா!
யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கு போகும் குழந்தையின் பாலினம் தொடர்பான வீடியோவை வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து வீடியோவை நீக்கியது மட்டுமில்லாமல், அப்படி ஒரு விஷயத்தை செய்ததற்காக மன்னிப்பு கேட்டார்.
தன் மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த இர்பான் மன்னிப்பு கேட்ட நிலையில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திய அவர் மீது கருணை காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கு போகும் குழந்தையின் பாலினம் தொடர்பான வீடியோவை வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. துபாய்க்கு தனது மனைவியோடு சென்றிருந்த இர்பான் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் இந்திய மருத்துவ விதிமுறைகளின்படி அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்நிலையில் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் மருத்துவகுழுவினர் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து youtuber இர்பான் சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை நீக்கியது மட்டுமில்லாமல், அப்படி ஒரு விஷயத்தை செய்ததற்காக தமிழக அரசின் மருத்துவ துறையிடம் வாட்ஸ் அப் மற்றும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் அவருடைய அந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ள மருத்துவ துறை, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இர்பான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்துது கோரிக்கை எழுந்து வருகிறது.
இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு வாங்கவில்லையா? எப்போது கிடைக்கும்! தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்!
இந்நிலையில் இர்பான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்: தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள இர்பானுக்குக் கருணை காட்டாமல் உரிய சட்ட நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.