சேலம் மாவட்டம், செந்தாரப்பட்டியை சேர்ந்த பெண் போலீஸ், செண்பகம். கடந்த 2014 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது இங்கு பணியாற்றிய திருச்சியை சேர்ந்த போலீஸ்காரர் ஜெயதேவ்  என்பவருடன் காதல் மலர்ந்தது

இதையடுத்து அவர்கள் இருவரும்  திருச்சி, திருவெறம்பூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இருவருக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டு வரும் ம் பிப்ரவரியில் திருமணம் நடக்க  உள்ளது. 

இந்நிலையில், ஜெயதேவனுக்கு திடீரென கிட்னி பாதிப்பு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. அவர் உயிருக்கு போராடி வரவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த செண்பகம்,நேற்று முன்தினம்  ராமேஸ்வரம் வந்தவர், அங்கு எலி மருந்து சாப்பிட்டு  தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மீட்ட போலீஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.