இந்த ஆண்டு கடந்த மே மாதம் இறுதியில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளாவிலும் கர்நாடகாவிலும் கனமழை கொட்டித் தீர்த்ததால் மேட்டூர் அணை 4 முறை நரம்கி வழிந்தது.

தமிழகத்தைப் பொறுத்த வரை நீலகிரி, குமரி, நெல்லை, கோவை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்தது. இந்த மாவட்டங்களில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

ஆனால் மற்ற இடங்களில் போதுமான மழை இல்லை. தற்போது தென் மேற்குப் பருவமழை முடிந்த, வடகிழக்கு பருமழை அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ளது.

இந்நிலையில்  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்துள்ள சின்னார்  அணைப் பகுதியில் இன்று இரவு திரண்ட ஏராளமான பெண்கள் மழை வேண்டி ஒப்பாரி வைத்து அம்மனை வழிபட்டனர்.

அப்போது பேசிய  பெண்கள், காவிரி கரை புரண்ட ஓடியும் எங்கள் சின்னார் அணையில் ஒரு பொட்டு தண்ணிரில்லை என வேதனையை வெளிப்படுத்தினர். அணைகள் நிரம்பும் வகையில் தமிழக அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

பெண்கள் ஒன்று சேர்ந்து மழை வேண்டி ஒப்பாரி வைத்து வழிபட்ட நிகழ்வில் ஆண்கள் பலரும் கலந்து கொண்டு வழிபட்டனர்