Asianet News TamilAsianet News Tamil

குறைதீர் கூட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - காஞ்சிபுரம் ஆட்சியர் வழங்கினார்...

Kanchipuram Collector distributed welfare for physically challenged
Kanchipuram Collector distributed welfare for physically challenged
Author
First Published Jul 3, 2018, 11:03 AM IST


காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் குறைதீர் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக எழுதி கொண்டுவந்து ஆட்சியரிடம் கொடுத்தனர். அதனைப் பெற்றுக்கொண்ட அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

அதனைத் தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளில் ஒருவருக்கு ரூ.6500 மதிப்பிலான காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலிக் கருவி, இரண்டு பயனாளிகளுக்கு ரூ.1200 மதிப்பிலான அக்குள் கட்டைகள், 9 பயனாளிகளுக்கு பழங்குடியினர் (இருளர்) நல வாரிய அடையாள அட்டைகள் ஆகியவற்றை ஆட்சியர் பா.பொன்னையா அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.நூர்முகமது, தனித்துணை ஆட்சியர் சக்திவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாலதி, கலால் உதவி ஆணையர் அமீதுல்லா, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஸ்ரீநாத், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios