விஸ்வரூபம் படத்தில் ஷங்கர் மகாதேவன் பாடிய 'உன்னை காணாது நான் இன்று' என தொடங்கும் பாடலை கேரள தொழிலாளி ஒருவர் பாடி அசத்தி உள்ளார். தன்னுடைய நிலத்தில் அமர்ந்தவாறு இந்த பாடலை அவர் பாடி உள்ளார்.

அவரது இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. இந்த பாடலை பாடிய தொழிலாளிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இதையடுத்து அந்த இளைஞர் கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ராகேஷ் உன்னி நூரநாடு என்பது தெரிய வந்தது. ராகேஷை ஷங்கர் மகாதேவன் போனில் அழைத்து பாராட்டினார்.

தொடர்ந்து இசையமைப்பாளர் சாம் சிஎஸ், தனது படத்தில் ராகேஷை பாட வைப்பதாக அறிவித்துள்ளார். 

இந்த நிலையில், ராகேஷை கமல் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். தனது ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு அவரை வரவழைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பாராட்டியதோடு, அவரை பாடவும் வைத்தார்.