Asianet News TamilAsianet News Tamil

ஜெட் வேகத்தில் நெருங்கும் கஜா… 18 கிலோ மீட்டர் ஸ்பீடில் கடற்கரையை நோக்கி நகர்கிறது !! 7 மாவட்டங்களில் செம மழைக்கு வாய்ப்பு !!

கஜா புயல் வேகம் அதிகரித்து 18 கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நெருங்கி கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர காற்று வீசக்கூடும் என்றும், புயலின் போது யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுளளது.

kaja strom coming near to nagai
Author
Chennai, First Published Nov 15, 2018, 10:49 AM IST

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் பேசும்போது,  வங்க கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் இன்று காலை வரை மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்தது. பின் 12 கி.மீ., வேகத்திலும், தற்போது மேலும் வேகம் அதிகரித்து 18.கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருகிறது.

kaja strom coming near to nagai

சென்னைக்கு கிழக்கே 328 கி.மீ., தொலைவிலும், நாகைக்கு 300  கி.மீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் கஜா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு  11,30 மணியளவில் கஜா புயல் பாம்பன் - கடலூருக்கு இடையே, நாகை அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

kaja strom coming near to nagai

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் ராமநாதபுரத்தில் அதிகன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

kaja strom coming near to nagai

சென்னையைப் பொறுத்தவரை கஜா புயலால் பெரும் பாதிப்பு இருக்காது என்றும். அதே நேரத்தில் பலத்தமழை பெய்யும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios