லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்து உள்ளது.

மின்வாரியத்தில் உதவி பொறியாளர் நியமனத்திற்கான எழுத்து தேர்வுக்கான கேள்வித்தாள் லீக்கானது தொடர்பாக மதுரை சூர்யாநகரை சேர்ந்த பழனிபாரதி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கோபமுற்றதுடன், காட்டமான கருத்துக்களையும் தெரிவித்தனர்.

அப்போது, லஞ்சம் வாங்குவோரை தூக்கிலிட வேண்டும் என்றும், தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும்,லஞ்சம் வாங்குவோர் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கென கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் லஞ்சம் வாங்குவோர் சொத்துக்களை முடக்க வேண்டும்..கடுமையான சட்டம் வந்தால்தான் லஞ்சம் வாங்குவது இயல்பான விஷயம் என்ற நிலை மாறும். அப்போது தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.