ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர். பின்னர் அரசுடன் நடந்த பேச்சு வார்த்தை முடிவில் போராட்டம் கைவிடப்பட்டது. அப்போது  தற்காலிகமாக போராட்டம் கைவிடுவதாகவும் அறிவித்தது ஜாக்டோ- ஜியோ 

இந்த நிலையில் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மீண்டும் பாரதத்தில் ஈடுபட்டால், நல்ல தீர்வு கிடைக்கும் என எண்ணி மீண்டும் போராட்ட்டதை அறிவித்து உள்ளது ஜாக்டோ- ஜியோ

அதன் படி, 

தேர்தல் நேரத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக மார்ச் மாதத்தில் மீண்டும் போராட்டத்தைக் கையில் எடுக்க உள்ளதாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்ட பல ஆசிரியர்களுக்குப் பணி மாறுதல்களும், அவர்கள் மீது வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை அரசு திரும்பப் பெற வேண்டியும் ஏற்கெனவே வலியுறுத்தி வந்த கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியும் நாளை தமிழகம் முழுவதும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் என்பது  குறிப்பிடத்தக்கது.