வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

 நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் நேற்று மாலை முதல் பேரருவில் தண்ணீர் அபாய அளவைத் தாண்டி கொட்டுகிறது.

 இதனிடையே, தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

மாலத்தீவுகள் முதல் தெற்கு கொங்கன் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதாகவும், அதேபோன்று அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதனால், தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைபெய்யக் கூடும். அடுத்த 2 நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.