சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 850 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு, கோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த அனைத்து பணிகளிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையை சேர்ந்த ஆரோக்கியம், சிவகங்கை சேர்ந்த பிரவின், அரியலூரை சேர்ந்த கார்த்திக், ஆகியோர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் பொழுது அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் அடைந்தனர்.

இதனையடுத்து அதிகாரிகள் அவர்களை தீவிர சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 850 கிராம் தங்க கட்டிகளை ரப்பர் பெட்டிக்குள்ளும் மற்றும் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் சுற்றுலா சென்று வந்த சிவகங்கை பிரவீனிடம் ஸ்வீட் பாக்ஸ் இருந்து. சுமார் 100 கிராம் தங்கம் மற்றும் 3 தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டது. இலங்கைக்கு கொழும்பு விமானம் புறப்பட தயாராக இருந்த. சென்னையை சேர்ந்த உசேன், அஸ்ரப் ஆகியோரிடம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பின்னர் அந்த பயணிகளிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 850 கிராம் தங்கத்தின் இந்திய ரூபாயின் மதிப்பு 25.5 லட்சம் ஆகும்.