மறைந்த முன்னாள் முதலமைச்சருக்கு எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் ஜேப்பியார், கடந்த 1988ம் ஆண்டு சத்தியபாமா பொறியியல் கல்லூரியை நிறுவினார். 

பின்னர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றையும் உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து சத்யபாமா பல் மருத்துவ கல்லூரி, செயின்ட் மேரீஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பனிமலர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட், எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பனிமலர் பாலிடெக்னிக் என ஏராளமான கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர் ஜேப்பியார்.

கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம், ஜேப்பியார் மரணமடைந்தார். இந்த நிலையில், ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள், நிர்வாகிகளின், எழும்பூர், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள, வீடுகள் போன்ற இடங்கள் என சென்னையில் சுமார் 32  இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை இன்று 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் வருமான வரித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான 32 கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் 350 கோடி ரூபாய் கணக்கில் காட்டாத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஜேப்பியார் கல்விகுழும அதிகாரிகள், உறவினர்களின் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.