“இளம் பெண்ணை தாக்கு பாலியல் வன்கொடுமை”

அடையாறு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை முயற்சியில் வடமாநிலத்தை சேர்ந்தவர் ஈடுப்பட்டுள்ளார். பெண்ணை தாக்கிய வடமாநிலத்தை சேர்ந்தவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பலத்த காயங்களுடன் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“பல ஆண்களுக்கு டிமிக்கிக் கொடுத்த சுருதி மீது குண்டர் சட்டம்”

திருமணம் செய்வதாக கூறி பலரை ஏமாற்றிய ஸ்ருதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஸ்ருதி தாய் சித்ரா மற்றும் தந்தை பிரசன்னா வெங்கடேஷ் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

“ஊத்தங்கரை அருகே இரண்டு இளம்பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை”

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இருவெறு கிராமங்களில் இரண்டு இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மோனிஷா திருவணப்பட்டி(கிராமம்)
தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார்.இதே போன்று சென்னப்பநாய்க்கனூர் கிராமத்தை சேர்ந்த கல்பனா(16) S/o கணேஷன்.என்ற பெண் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் மாட்டியுள்ளார் இரண்டு பெண்கள் தற்கொலை குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஹோலி கொண்டாடிய வாலிபர் அடித்துக் கொலை

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் நீரஜ் ஜாதவ். தலித் வாலிபரான இவர் நேற்று தனது நண்பர்களுடன் பிவாடி நகர் பகுதியில் ஹோலி பண்டிகை கொண்டாடினார். ஒருவருக்கொருவர் உடலில் வண்ணப் பொடி தூவி விளையாடினார்கள்.

அப்போது வேறு சிலர் கும்பலாக ஹோலி கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது நீரஜ் ஜாதவுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் நீரஜ் ஜாதவை எதிர் தரப்பினர் சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் பலத்த காயம் அடைந்த பரிதாபமாக இறந்தார்.

மனைவி ருசியாக சமைக்காததால் டைவர்ஸ் கேட்ட கணவர்"

மும்பை சாந்தாகுருஸ் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்பநல கோர்ட்டில் மனு செய்திருந்தார். அதில், தன் மனைவி தாமதமாக எழுந்து சமைப்பதுடன், ருசியாக சமைப்பது இல்லை, தனக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தர மறுக்கிறார் என்று குற்றம் சாட்டி இருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனு, நீதிபதிகள் தாதெட், சாரங் கோட்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ‘மனுதாரரின் மனைவி தாமதமாக எழுந்திருப்பதும், சுவையின்றி சமைப்பதும் கணவரின் சிறிய தேவைகளை பூர்த்தி செய்யாததும் கொடுமையான விஷயங்களாக தெரியவில்லை. அவர் மனைவி, அலுவலக வேலையுடன் சமையல் வேலையும் செய்துள்ளார்” என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

“கடன் தொல்லையால் மனைவியை வெட்டிவிட்டு தற்கொலை செய்த தொழிலாளி”

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கரிசகாடு பகுதியை சேர்ந்தவர் முருகனு தனது 6 சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக முருகன் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். அதனை பல நாட்கள் ஆகியும் அவரால் அடைக்க முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் கடன் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக சொத்தை விற்று கடனை அடைக்க முடிவு செய்தார். இதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகன் அரிவாளால் பானுமதியை வெட்டினார். இதில் அவர் பலத்த வெட்டுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

இதையடுத்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்த முருகன், உயிருக்கு போராடிய மனைவியை மீட்டு கார் மூலம் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சென்றதும் பானுமதிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனிடையே முருகன் மயங்கி விழவே, அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் வி‌ஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முருகன் இறந்தார்.