கள்ளக்காதல் தவறில்லை என்று உச்சநீதிமன்றமே தெரிவித்து விட்டது என தன் மனைவியிடம் கணவர் கூறிய பதிலால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

சென்னை நேசப்பாகத்தில் காதல் திருமணம் செய்துக்கொண்ட ஜான்பால் பிராங்க்ளின் - புஷ்பலதா இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஜான்பால் மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தன் மனைவிக்கு தெரியவரவே அவர் கண்டித்து உள்ளார். மேலும் அடிக்கடி தன் குழந்தையை தூக்கி சென்று புது காதலியுடன் கொஞ்சி விளையாடி வந்து உள்ளார். இது போன்று சில நாட்கள் தொடரவே, கணவரை நம்பியே உண்மையாக வாழ்ந்த மனைவி புஷ்பலதா மீண்டும் அவருடன் சண்டை போட்டு உள்ளார். 

அப்போது, கள்ளக்காதல் தவறில்லை என்று உச்சநீதிமன்றமே தெரிவித்து விட்டது. உனக்கென்ன என தன் மனைவியிடம் கூறி உள்ளார். மனமுடைந்த புஷ்பலதா கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இது குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலிசார், உடலை கைப்பற்றி சோதனை செய்த போது அந்த பெண் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், "என்  குழந்தையை கூட விட்டு வைக்காமல் தூக்கி சென்று, கள்ளக்காதலியுடன் பழகி வருகிறார். நான் இறந்தாவது அவர்கள் நன்றாக இருக்கட்டும் என உருக்கமாக எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டு உள்ளார்.

உச்சநீதிமன்ற  தீர்ப்பு, எந்த ஒரு குறிப்பிட் வழக்கிற்காக கருத்தை தெரிவித்து இருந்தது என்பது கூட புரிந்துக்கொள்ளாமல், கள்ளக்காதல் செய்பவர்கள் எல்லாம் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து உள்ளது என எண்ணி, ஐந்து நிமிட சுகத்திற்காக கள்ளக்காதல் என்ற பெயரில், தன்னை நம்பி வந்த மனைவி மற்றும் கணவருக்கு  துரோகம் செய்வது எந்த விதத்திலும் நல்லது சரியாக தெரியவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை சரியாக  புரிந்துக்கொள்ளாமல் இவ்வாறு நடந்துக்கொள்வதால், தற்போது  பலியானது  என்னமோ ஓர் உயிர்  அல்லவா..?