போதுமான அளவிற்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதால், தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது என்று மின்சார துறை அமைச்சர் தங்கமணி உறுதி கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்சார துறை அமைச்சர் தங்கமணி, செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், அடுத்த நாளே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு, போதுமான நிலக்கரி இல்லை என்று கூறி  கடிதம் எழுதி இருந்தார். இது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறும்போது, அமைச்சர்களின் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக கூறியிருந்தார்.இந்த நிலையில், போதுமான அளவிற்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது என்றும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். 

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் அமைச்சர் தங்கமணி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 
தேவையான அளவிற்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறினார். எனவே மின் வெட்டு பாதிப்புக்கு தமிழகம் ஆளாகாது என்று 
அமைச்சர் தங்கமணி உறுதியாக கூறினார்.