சென்னை மெட்ரோ ரயில், மாநகர பேருந்தில் பயணம் செய்ய பொதுவான பயண அட்டை வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுவரை  ரயிலில் பயணம் செய்ய  தனி பயண அட்டையும், மாநகர பேருந்தில் பயணம்  செய்ய தனி பயண அட்டையும் வழங்கப்பட்டு வந்தது

ஆனால் இனி அனைவரும் பயன்பெறும் வகையில் பொதுவான பயண அட்டை  வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்

இதன்மூலம், பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்லும் அலுவலர்கள் என அனைவரும் பயன் பெறுவார்கள்

மேலும்  தொடர்ந்து  பேசிய  அமைச்சர் விஜய பாஸ்கர்,

கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் இந்த ஆண்டு பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.1.65 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

அதே போன்று தீபாவளிக்கு இயக்கிய பேருந்துகள் மூலம் ரூ.89.36 கோடியும், பொங்கலுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.75.80 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என கூறினார்.

சென்னையில் மட்டுமே முதியோர் இலவச பஸ் பாஸ்

முதியோர்களுக்கான இலவச பேருந்து பாஸ் சென்னையில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநிலத்தின் பிற மாட்டங்களில் இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது என்றும் பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் மேலும் 3,000 புதிய அரசுப்பேருந்துகள் வாங்கப்படும் என்றார்.