தமிழகத்தில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை சீசன் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் , வடகிழக்கு  பருவ காற்றின் சாதகமான போக்கு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சி , விழுப்புரம், கடலூர், நாகப்பட்டி னம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

இந்த மழை தொடர்ந்து 4 நாட்களுக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.குமரிக்கடல் பகுதியில் சூறைக் காற்று வீச வாய்ப்பு உள்ளதால், அப்பகுதியில் மீன்பிடிக்க மீன வர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.