Asianet News TamilAsianet News Tamil

இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் மழை வெளுத்துக்கட்டுமாம் !!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் காரணமாகவும். தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

heavy rain in 4 dist
Author
Chennai, First Published Jun 11, 2019, 10:02 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக கேரளாவில்  கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.  தற்போது தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தாழ்வு உருவாகியுள்ளது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி 'வாயு' புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

heavy rain in 4 dist
மேலும் குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹூவா பகுதியில் ஜுன் 13 இல் வாயு புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.  வாயு புயலால் ஜுன் 13 ஆம் தேதி 135 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு நோக்கி நகரும் வாயு புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும்.  இதனால் வருகிற 13 மற்றும் 14-ந்தேதி குஜராத்தில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 110 கி.மீ முதல் 120 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

heavy rain in 4 dist

குறிப்பாக கடலோர பகுதியான சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் என்பதால் தேசிய பேரிடர் மீட்புக் குழு குவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராணுவம், கப்பற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படைகளை  உஷார் நிலையில் இருக்க குஜராத் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

heavy rain in 4 dist

தமிழகத்தைப் பொறுத்தவரை  தேனி, நெல்லை, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சராசரியாக 5 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 

தென் மாவட்டங்களில் வெப்பநிலை குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல் குஜராத்தை நோக்கி நகர்ந்து செல்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

heavy rain in 4 dist

கன்னியாகுமரி, நெல்லை  மாவட்டங்களில் 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் கன்னியாகுமரியில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

அதே நேரத்தில் சென்னை உள்பட வட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios