வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்திருப்பதாலும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு மழைப் பொழிவு கடந்த ஆண்டைவிட குறைவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் நேற்று முதலே மழை பரவலாக பெய்து வருகிறது. தாம்பரத்தில் நேற்று ஒரே நாளில் 15 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம், லால்குடி, கல்லகுடி, மணச்சநல்லூர், புள்ளம்பாடி, தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி,பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் மழைப் பெய்து வருகிறது. 

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

 மதுரை மாவட்டத்தில் ஒத்தக்கடை, மேலூர், கீழவளவு, மேலவளவு, அழகர்கோவில் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தொடர் கனமழை காரணமாக திருச்சி, அரியலூர், திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.,29) விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கனமழை காரணமாக திருச்சி, அரியலூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு  மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.