தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட குறைந்த அளவே பெய்துள்ளதுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர்   ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது,.

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் இன்று பிறப்பித்துள்ளனர்.