தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை  மீண்டும் தீவிரம் காட்ட  தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய துவங்கியுள்ளது. டிசம்பர் -1  ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்  உள்ள  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் , செங்கல்பட்டு மாவட்டத்திலும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதே போல் தொடர் மழை காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.