Asianet News TamilAsianet News Tamil

இப்பவே தாங்க முடியல.. அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கப் போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை..

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Heat will increase in tamilnadu for next 5 day meterological dept warning Rya
Author
First Published Mar 16, 2024, 11:13 AM IST | Last Updated Mar 16, 2024, 11:13 AM IST

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் புதுவை, காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். வரும் 20 முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பநிலையை பொறுத்தவரை இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது அசௌகரியம் ஏற்படலாம். 

வாகன ஓட்டிகளே உஷார்.! தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க! ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்.!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும், அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mansoor Ali Khan: இரவோடு இரவாக கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன காரணம் தெரியுமா?

இதனிடையே அடுத்து வரும் நாட்களில் மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெயில் 100 ஃபாரன்ஹீட்டை தாண்டும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், கோவை, கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios