தமிழகத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கத்திரி வெயில் வரும் 29 ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது.

கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மாலை மழை வெளுத்தக்கட்டியது. அதே நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று வெயில் 100 டிகிரியைத் தாண்டி சென்ஞ்சுரி அடித்தது. 

தற்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் வெபப்பம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த அதிகரிக்கும் வெயிலானது தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் சென்ஞ்சுரி போட்டிருக்கிறது. அந்த வகையில் தொண்டி-101, சென்னை-100.4, திருத்தணி-108.1, வேலூர்-106.7, மதுரை-106.1, பாளையம் கோட்டை-104.1 கரூர்-105.4, திருச்சி-105.2, சேலம்-101.4 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது.
 
இப்படியே வெப்பநிலை கூடிக் கொண்டே இருந்தால் என்னதான் செய்வது என புலம்புகிறார்கள் தமிழக மக்கள்.