தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே என்று நடிகர் சித்தார்த்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஹெச்.ராஜா.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானை கையாண்ட விதம், மூன்றே நாளில் விமானியை இந்தியாவிடம் ஒப்படைக்க செய்தது என இந்திய ராணுவத்தின் பெருமையை மக்கள் அறியும் வண்ணம் மேற்கோள் காட்டி “நாம் ராணுவத்தினரை நம்புவதும் நாம் அவர்களை நினைத்துப் பெருமைப் படுவதும் இயற்கையான ஒன்று... ஆனால் ராணுவத்தினர் மீது சிலர் சந்தேகம் கொண்டு கேள்வி கேட்கிறார்கள்.. எனக்கு இது புரியவில்லை..என பிரதமரின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.

 

இந்த ட்வீட் -கு, கருத்து  தெரிவித்து இருந்த நடிகர் சித்தார்த்,“நம் மக்கள் நம் நாட்டு ராணுவத்துடனும் ராணுவ வீரர்கள் பக்கமும்தான் நிற்கிறார்கள். நீங்களும் உங்கள் கும்பலைச் சேர்ந்தவர்களும்தான் நம்புவதில்லை. முதலில் புல்வாமாவை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். நீங்கள் ராணுவ வீரர் இல்லை, அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்” என்று கருத்திட்டிருந்தார் சித்தார்த்.
 
நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவிற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசத்துக்கு எதிராக நீங்க ஓவரா நடிக்க வேண்டாமே" என அவருக்கே  உண்டான பாணியில் தக்க பதிலடி கொடுத்து உள்ளார்.