இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் என பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்து உள்ளது 

கஜா புயல் தமிழக கடலோர பகுதியை நெருங்கி வருவதாலும், இன்று மாலை அல்லது இரவு 7 மணிக்கு  மேல் கரையை கடக்க உள்ளதால் பெரும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதில் குறிப்பாக ஏழு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்க வாய்ப்பு உள்ளது என ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில், தற்போது பாதுகாப்பு கருதி மின்சாரம் இணைப்பு நிறுத்தப்படும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், பெரும் மழைக்கு வாய்ப்பு உள்ள 7 மாவடங்களில் இன்று மாலை ஆறு மணி முதல் பேருந்துகள் இயக்க வேண்டாம் என பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்து உள்ளது. இந்த அறிவுறுத்தலை ஏற்றுக்கொள்ளலாமா என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.ஆலோசனை நடந்து முடிந்த பிறகு, பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்கும். 

புயல் கரையை கடந்த பிறகு, பேரிடர் மேலாண்மைதுறையே தெரிவிக்கும் என்றும், யாரும் கடலோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், புயல் கரையை கடக்கும் சமயத்தில், யாரும இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது நல்லது அறிவுறுத்தப்பட்டு உள்ளது.