Asianet News TamilAsianet News Tamil

#Breaking | நெகிழி உற்பத்தி பற்றி தகவல் அளித்தால் பரிசு… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி அறிவிப்பு!!

நெகிழிப் பொருள் உற்பத்தி பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு பாராட்டும், வெகுமதியும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

Gift for those who give information about the plastic production
Author
Tamilnadu, First Published Nov 23, 2021, 5:12 PM IST

நெகிழிப் பொருள் உற்பத்தி பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு பாராட்டும், வெகுமதியும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தவல்ல நெகிழிப் பொருள்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இவ்வித நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் சந்தைப் பயன்பாடுகளுக்கு இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தவல்ல நெகிழிப் பொருள்களுக்கு ஏற்கெனவே தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் பற்றி தகவல் அளித்தால் வெகுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தி கைவிடப்படும் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி பயன்பாட்டுக்கு 2018 ஆம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முதல் தடை உள்ளது. பிளாஸ்டிக்பை, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டு, தர்மாகோல் கப்பு, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

Gift for those who give information about the plastic production

உணவுப் பொருள்கள் கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றங்கள், பசுமை தீர்ப்பாயம் தொடர்ந்து அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும் நெகிழிப் பொருள் உற்பத்தி பற்றி தெரிந்தால் https://tnpcb.gov.in/contact/php என்கிற இணையதளத்தில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Gift for those who give information about the plastic production

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு முறை பயன்படுத்தி கைவிடப்படும் நெகிழிப் பொருட்கள் உற்பத்தி பயன்பாட்டுக்கு 2018 ஜூன் 25 முதல் தடையுள்ளது. தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றங்கள், பசுமை தீர்ப்பாயம் தொடர்ந்து அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நெகிழிப் பொருள் உற்பத்தி பற்றி தெரிந்தால் tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் பங்களிப்பிற்காக பாராட்டும், வெகுமதியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் நெகிழிப் பொருள்களின் அடைப்பு காரணமாக கூறப்பட்ட நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios