Asianet News TamilAsianet News Tamil

பிடிமாடானது ஆசையாய் வளர்த்த காளை... விரக்தியடைந்த மாணவி செய்த காரியத்தால் அதிர்ச்சி!!

வளர்த்த காளை பிடிமாடாக ஆனதால் அமைச்சர் மூர்த்தி சிறப்புப் பரிசு வழங்க முன்வந்தும் அதனை வாங்க இளம்பெண் மறுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

frustrated girl avoided prize for madurai jallikattu
Author
Madurai, First Published Jan 14, 2022, 9:06 PM IST

வளர்த்த காளை பிடிமாடாக ஆனதால் அமைச்சர் மூர்த்தி சிறப்புப் பரிசு வழங்க முன்வந்தும் அதனை வாங்க இளம்பெண் மறுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி வருகின்றன. அமைச்சர் வீட்டு காளை முதல் சாமானியர்கள் வீட்டு காளை வரை களத்தில் இறங்கி காளையர்களை சிதறடித்து வருகின்றன. ஏராளமான இளம் பெண்களும் சிறுமிகளும் காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டு களம் காண வைத்துள்ளனர். இந்த நிலையில் தான் வளர்த்த காளை பிடிமாடாக ஆனதால் அமைச்சர் மூர்த்தி சிறப்புப் பரிசு வழங்க முன்வந்தும் அதனை வாங்க இளம்பெண் மறுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்தவர் யோகதர்ஷினி.

frustrated girl avoided prize for madurai jallikattu

இவர் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். ஜல்லிக்கட்டு தடைக்குப் பிறகு நடைபெற்ற போராட்டம் தான் ஜல்லிக்கட்டு காளைகளின் மீது இவருக்கு நாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையும், அண்ணனும் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்ப்பில் ஈடுபட்டாலும், மிக மிக பின்னால்தான் யோகதர்ஷினிக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தனது காளைகளை அவிழ்ப்பதை பெருமையாகக் கருதுகிறார். கடந்த முறை இதேபோன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனது காளை களமிறங்கியபோது, தனக்கு விழாக் குழுவினர் வழங்க அழைத்த போது, அதனைப் பெற மறுத்து காளையோடு நடையைக் கட்டினார்.

frustrated girl avoided prize for madurai jallikattu

அப்போது வருவாய்த்துறை அமைச்சர், மைக்கில் யோகதர்ஷினியை பரிசு வழங்குவதற்காக அழைத்தபோதும் அதனை ஏற்க மறுத்தார். அதேபோன்று இந்த முறை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனது காளையை களமிறக்கினார். அது வீரர்களால் பிடிக்கப்பட்டு பிடிமாடாக ஆனபோதும் கூட, விழாக் குழுவினர் யோகதர்ஷினிக்கு சிறப்பு வழங்க அழைத்த போது அதனை மறுத்துவிட்டார். இந்த முறை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மைக்கில் சிறுமி யோகதர்ஷினியை அழைத்த போதும் அதை சட்டை செய்யாமல் தனது காளையை அழைத்துக் கொண்டு நடையைக் கட்டினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios