சென்னை காரப்பாக்கத்தில் இயங்கி வரும் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

சென்னை காரப்பாக்கம் என்ற பகுதியில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஷீ செல் என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த பகுதியில் எப்போதும் மிகவும் போக்குவரத்து அதிகமாகவும், மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் இடம் என்பதால் இரவு பத்து, பதினொரு மணி அளவிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் இந்த ஹோட்டல் கிச்சனில் ஏற்பட்ட சிறிய தீ மளமளவென பரவி ஓட்டல் முழுக்க கொழுந்து விட்டு எரியத்தொடங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனே விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கிச்சனில் ஏற்பட்ட  தீயால் இந்த சம்பவம் நடந்து உள்ளது என்றும், இதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.