Asianet News Tamil

நெருங்குகிறது "கஜா"..! 4 மணிக்குள் வீடு திரும்ப அரசு கோரிக்கை...!

தனியார் நிறுவன ஊழியர்கள் இன்று மாலை நான்கு மணிக்குள் வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

employees can return home before 4 pm today due to gaja cyclone
Author
Chennai, First Published Nov 15, 2018, 1:24 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தனியார் நிறுவன ஊழியர்கள் இன்று மாலை நான்கு மணிக்குள் வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

கஜா புயல் இன்று கரையை கடக்கும் என ஏற்கனவே தெரிவித்து இருந்தது போலவே, சென்னைக்கு கிழக்கே 328 கி.மீ., தொலைவிலும், நாகைக்கு 300 கி.மீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் கஜா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கஜா புயல் பாம்பன் - கடலூருக்கு இடையே, நாகை அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் ராமநாதபுரத்தில் அதிகன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாகை திருவாரூர், புதுக்கோட்டை,கடலூர், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எந்த வித பாதிப்பும் இல்லாமல், மலையில் சிக்கி அவதிப்படாமல் இருக்க இன்று மாலை 4 மணிக்குள், அவர்கள் வீடு திரும்ப நிறுவனங்கள் அனுமதி கொடுக்க வேண்டும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios