சென்னை கொளத்தூரில் வீட்டு செலவுக்கு பணம் கேட்ட மனைவியின் கழுத்தை கணவன் பிளேடால் அறுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவாக இருந்த கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  இப்போதெல்லாம் யார் யாரை கொலை செய்கிறார்கள் என்று யாராலும்  கணிக்க முடிவதில்லை,  மகன் தாயை கொலை செய்வதும்,  தாய் மகனை கொலை செய்வதும், மனைவி கணவனை கொலை செய்வதும்,  கணவன் மனைவியை கொலை செய்வது என எல்லாம் தலைகீழாக நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அந்த கொலைகளுக்காக அவர்கள்  சொல்லும் காரணங்கள்தான் கேட்போரை வாயடைக்க வைக்கிறது. 

அட,  இதற்கொல்லாமா கொலை செய்வீர்கள் என்று அதிர்ச்சியடையவும்  வைக்கிறது. இதுபோன்ற ஒரு  சம்பவம்  சென்னை கொளத்தூரிலும் அரங்கேறியுள்ளது.   சென்னை கொளத்தூர் ஜி கே எம் காலனி 6-வது தெருவில் வசித்து வருபவர் சக்கரையா (வயது 50) ஆட்டோ டிரைவர் ஆன இவர், அன்றாடம் குடித்து விட்டு மனைவியிடம் சண்டைபோட்டு வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த 24 ம் தேதி குடிபோதையில் வீட்டுக்குவந்த சக்கரையாவிடம்,  வீட்டு செலவுக்கு பணம் வேண்டும் என அவரது மனைவி கேட்டுள்ளார். ஆனால்  ஏற்கனவே மனைவி மீது கோபத்தில் இருந்த சக்கரையாவிடம்,   வீட்டுச் செலவுக்கு மனைவி பணம் கேட்டது மேலும் அவரை கோபமடைய வைத்தது, பணம் தர முடியாது என்று மனைவியிடம் சக்கரையா கூற,  பிறகு  அது வாக்குவாதமாகி கைகலப்பாக மாறியது. 

இந்நிலையில் கையில் மறைத்துவைத்திருந்த பிளேடால் மனைவி பத்மினியின்  கழுத்தை சரமாரியாக வெட்டினார் சக்கரையா. வலி தாங்க முடியாமல் மனைவி பத்மினி அலறினார், பத்மினியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து  ஆபத்தான நிலையில்  இருந்த பத்மினையை மீட்டு  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் சேர்த்தனர். ஆபத்தான் நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். உடனே அக்கம் பக்கத்தினர் வந்ததை கண்ட சக்கரையா பிளேடே கீழே போட்டிவிட்டு அங்கிருந்து தப்பினார். இந்நிலையில் கடந்த  2 நாட்களாக தலைமறைவாக இருந்த சக்கரையாவை  பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகில் பெரவள்ளுர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.