ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த மண்ணை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் இருந்து 1000 கிலோநாய் கறி கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டு உள்ளது. 

கடந்த சில நாட்களாக அவ்வப்போது இது போன்று பார்சல் பெட்டிகள் சென்னை ரயில் நிலையத்தில் இறக்கப்படுகிறது என்ற ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, உணவு பாதுகாத்து துறை அதிகாரிகள் இன்று திடீரென சோதனை செய்தனர். அப்போது 12 பெட்டிகளில் ஆயிரம் கிலோ கறி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  பின்னர் அதனை சோதனை செய்த போது, அதில் தோல் உரிக்கப்பட்ட நாய் கறிகள் வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் மற்ற சில பெட்டிகளில் நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு கறிகளை பிரித்து அறியாத அளவிற்கு, சரியான முறையில் பதப்படுத்தாமல் வைக்கப்பட்டு உள்ளது. இதே போன்று பல மாதங்களாக கறிகள் சென்னை எழும்பூரில் இறக்கப்பட்டு வந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவை அனைத்தும்  நாய் கறிகள் என்பது இன்று தான் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

இதனை தோடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கறிகளை கைப்பற்றி சோதனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.

மேலும் இந்த கறிகளை அனுப்பியவர் யார்....? எங்கிருந்து அனுப்பி உள்ளனர்..? யாருடைய பெயரில் சென்னைக்கு பார்சல் வந்து உள்ளது..? சென்னையில் எந்தெந்த ஓட்டலுக்கு இதுவரை இந்த நாய்க்கறி சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இது குறித்த முழு தகவல் கிடைக்கப்பெரும் தருணத்தில், சிக்கன் மட்டன் என நம்பி எந்தெந்த கடையில் இது போன்ற நாய் பிரியாணி வழங்கப்பட்டு வந்துள்ளது என்பது வெளிச்சத்திற்கு வரும். 

இதற்கு முன்னதாக ஏற்கனவே சரியான முறையில் பதப்படுத்தப்படாத கறிகளை சென்னை எழும்பூர் பகுதியில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல், சில மாதங்களுக்கு முன்பாக  மட்டனுக்கு பதில் பூனை கறி பிரியாணி விவகாரம் தலைதூக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி சென்னை ஓட்டல்களில் நம்பிக்கையாக அசைவ உணவு உண்பது என்பது ஒரு கேள்வி குறியாகி  உள்ளது...அதே வேளையில் எந்த கறியாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஒரு கட்டு கட்டும் மக்களும்  இருக்க தான் செய்கிறார்கள்...! ஆனால் எதில் கை வைத்தாலும் உணவில் கை வைத்து மற்றவர்கள் வயிற்றில் அடிப்பது என்பது.....சரியானதாக இல்லை அல்லவா..?