அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள கோவிந்த் பாலப் பந்த் அரசு மருத்துவமனைக்க 45 வயது மதிகக்தக்க ஒரு பெண்ணுக்கு சுவாசப் பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து, மருத்துவப் பிரசோதனைக்கு அந்த பெண் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அந்த பெண்ணுக்கு ஆஞ்ஜியோகிராபி செய்த டாக்டர்கள், அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 12-ம் தேதி அந்த பெண்ணுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொண்டு அறுவைசிகிச்சை நடந்தது. அந்த சமயத்தில் அந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவுகளில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அந்த பெண் இது தொடர்பாக போலீஸில் புகாரும் அளித்துள்ளார். அந்த புகாரில், எனக்கு அறுவை சிகிச்சை நடந்த போது நான் மயக்க நிலையில் இருந்ததைப் பயன்படுத்தி டாக்டர்கள் என்னிடம் தவறாக நடந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட டாக்டர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண் கண்ணீருடன் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர ஜெயின் ஆகியோருக்கு கடிதம் எழுதி இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த பெண்ணும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன் டெல்லி ரோகினா பகுதியல் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றும் துப்புறவுத் தொழிலாளி ஒருவர் 11வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.அதன்பின் அந்த தொழிலாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.