Asianet News TamilAsianet News Tamil

எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது - மனு கொடுத்து பொதுமக்கள் கரார்...

Do not set up the cellphone tower in our area - people give petition ...
Do not set up the cellphone tower in our area - people give petition ...
Author
First Published Jul 4, 2018, 7:02 AM IST


கரூர்

கரூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து திட்டவட்டமாக தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 18-வது வார்டு பகுதியில் உள்ள பழையகோர்ட்டு தெரு, செக்கடி புதுத்தெரு, மரக்கடை ஸ்டோர் பகுதியை  சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஊர்வலமாக குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

யில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 

இதுகுறித்து அவர்கள், "பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் செல்போன் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சட்டத்திற்கும், நீதிமன்ற தீர்ப்பிற்கும் புறம்பாக குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பழையகோர்ட்டு தெரு, செக்கடி புதுத்தெரு, மரக்கடை ஸ்டோர் பகுதி குடியிருப்புகள், பள்ளி, கோயில்கள் போன்றவை சுற்றியுள்ள பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

இங்கு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடுமையான நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். நிலத்தடிநீர் குறையும் என்பது போன்ற பலவகையில் எங்கள் பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, பொதுமக்கள் உயிர் பாதுகாப்பிற்காகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க இங்கு செல்போன் கோபுரம் அமைக்க தடைவிதிக்க வேண்டும் என்று மனு அளிக்கவந்தோம்" என்று தெரிவித்தனர். 

அதன்பின்னர் தங்கள் மனுவை கோட்டாட்சியர் லியாகத்திடம் அளித்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios