DMK Manifesto: அசர வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை.. அதிரடி காட்டிய முதல்வர் மு.க ஸ்டாலின்!!
2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக தேர்தல் அறிக்கை மற்றும் திமுக நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலிலேயே தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
திமுக வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கும் அதிகம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிபார்க்கப்படுகிறது. சேலம் இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு அதிகம் வாய்ப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். எனினும், உதயநிதியின் இந்த கோரிக்கை தொடர்பாக பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், மூத்தவர்கள், இளையவர்கள், பெண்கள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியே வேட்பாளர் பட்டியல் இருக்கும் என்று கூறியிருந்தார்.
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகமானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. கோவை, தேனி, ஆரணி, ஈரோடு ஆகிய 4 தொகுதிகளில் புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர். திமுகவில் 50 சதவீதம் புதுமுக வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்றும், அதில் முனைவர் பட்டம் பெற்றோர், பட்டதாரிகள், முது நிலை பட்டதாரிகள், மருத்துவர்கள், பெண்கள், ஒன்றிய அளவு வரை அடிமட்ட பொறுப்பில் இருப்போர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் 14 கூட்டங்களை தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்தியுள்ளது. அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பிப்ரவரி 5 அன்று தூத்துக்குடியில் தொடங்கி கன்னியாகுமரி, மதுரை, ஒசூர், கோயம்பத்தூர், திருப்பூர், சேலம், வேலூர், ஆரணி, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.
தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை நேரடியாக பெற்றனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் திருமதி. கனிமொழி கருணாநிதி, எம்.பி. அவர்கள் தலைமையில் 38 மாவட்டங்களில் இருந்து 1100 க்கும் மேற்பட்ட சங்கங்களை சந்தித்து அதன் வாயிலாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கருத்துக்களை பெற்றனர். இந்நிகழ்வுகளில் 50000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவிஎம் மெஷின் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? முடியாதா? ஓர் அலசல்!