புகழ்பெற்ற மனநல மருத்துவர் ஷாலினியை கைது செய்யக்கோரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் மனநல மருத்துவர் ஷாலினி கலந்து கொண்டு பேசினார்.

சிலப்பதிகாரம் குறித்து பேசும்போது, கண்ணகி கற்புக்கரசி அல்ல என்றும் அவர் ஒரு மனநோயாளி என்றும் கூறியிருந்தார்.

அவரது இந்த பேச்சுக்கு தமிழகம் எங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், தேனி மாவட்டம் கம்பத்தில் மங்களதேவி கண்ணகி அறக்கட்டளையின் சார்பில், கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஷாலினி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கண்ணகியை தரக்குறைவாக பேசிய மனநல மருத்துவர் ஷாலினியை கைது செய்ய வேண்டும் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அறக்கட்டளையினர் கூறும்போது, தமிழகம் மற்றும் கேரள ஆகிய இரண்டு மாநிலங்களிலும் மங்களதேவி கண்ணகியை தெய்வமாக மதித்து வருகின்றனர். இந்த நிலையில் மனநல மருத்துவர் ஷாலினி, கண்ணகி பற்றி அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது என்றனர். 

எனவே தமிழக அரசு குற்றவியல் சட்டப்படி மனநல மருத்துவர் ஷாலினியை கைது செய்ய வேண்டும் என்று கன்னகி அறக்கட்டளையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.