மக்களே கவனம்…! வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. தமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு நிலையானது, தாழ்வு மண்டலமாக வலுபெற்று உள்ளதால் தமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலையானது, தாழ்வு மண்டலமாக வலுபெற்று உள்ளதால் தமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி என பல மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
கிட்டத்தட்ட 14 மாவட்டங்களில் அடுத்து வரும் சில நாட்களில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது இந் நிலையில் வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, தாழ்வு மண்டலமாக வலுபெற்று உள்ளதால் தமிழகத்துக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கலிங்கப்பட்டினத்தில் இருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 740 கிமீ தொலைவில் நிலை கொண்டு இருக்கிறது. மேலும் வலுவடைந்து ஒடிசா, வடக்கு ஆந்திரா இடையே நாளை மாலை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் எதிரொலியாக கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டு உள்ளது. பாம்பன், காரைக்கால் துறைமுகங்களிலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.