பட்டாசு வெடிப்பதற்கு, 2 மணிநேரம் மட்டுமே அனுமதி அளித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதியளித்தது.

இதைதொடர்ந்து, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால், போலீசார் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இதற்கிடையில், அனுமதிக்காத நேரத்தில் ஒரு சிறுவன் பட்டாசு வெடித்ததால், அவனது தந்தையை கைது செய்யப்பட்டார். டெல்லியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது தமிழகத்தில் பரவலாக வழக்கு பதிவு செய்துள்ளது.ஆனாலும், தமிழகத்தில் பொதுமக்கள் விரும்பியபடி பட்டாசு வெடித்தனர்.

தடையை மீறியதாக நெல்லையில் 6, கோவையில் 30, திருப்பூரில் 42, விழுப்புரத்தில் 30, ஸ்ரீவில்லிபுத்தூர் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சில இடங்களில் போலீசார் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.