எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரையும் மார்ச் 11 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரையும் மார்ச் 11 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பல ஆண்டுகாலமாகவே மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. சில மீனவர்கள் உயிரிழந்துள்ளனர் பல மீனவர்கள் இலங்கை சிறையில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். படகுகளை இழந்து பலர் தவித்து வருகின்றனர்.

அந்த வகையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரையும் மார்ச் 11 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னாருக்கும் இரணைதீவுக்கும் இடையே இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு படகையும் அதிலிருந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த ரமேஷ், ரோடிக், கெம்பிளேஷ், இமான், அஜித் உள்ளிட்ட 8 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை கிளிநொச்சி கிராஞ்சி கடற்படை முகாமில் தங்க வைத்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து விசாரணைக்கு பின் மீனவர்களை கிளிநொச்சி நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதை அடுத்து எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேருக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழக மீனவர்கள் 8 பேரையும் மார்ச் 11 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.