ஒரே மாதிரி அறிகுறிகளை கொண்ட டெங்கு - சிக்கன் குனியா..! 

மழைக்காலம் தொடங்கியதும் காய்ச்சல், தலைவலி, இரும்பல் என ஒவ்வொரு பிரச்னையும் நமக்கு வர தொடங்கும். அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சிக்கன் குனியா, டெங்கு இன்னோரு பக்கம் பன்றிக்காய்ச்சல் என சொல்லிக்கொண்டே போகலாம்.

அதே வேளையில்,டெங்கு மற்றும் சிக்கன் குனியா இவை இரண்டிற்கும் உள்ள பொது பண்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.

டெங்கு காய்ச்சல் கொசுவினால் பரவும் நோயாகும். அது பல்வேறு வகையான ஏடிஸ் கொசுவினால் பரவுகிறது. இதே போன்று சிக்குன் குனியா என்பது சிக்குன் குனியா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றாகும். இந்த வைரஸ் ஒரே ஏடிஸ் வகைக் கொசுக்களின் இரண்டு இனங்களால் பரப்பப்படுகிறது. ஆனால், சிக்கன் குனியாவை விட, டெங்கு சற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டால், சில மாதங்களுக்கு பின்பு கூட அதன் தாக்கம் நம் உடலில் தெரிய தொடங்கும். குறிப்பாக அதிக மூட்டு வலி , உடல் முழுக்க ஒரு விதமான சோர்வை உணர முடியும்.

சிக்கன் குனியா மற்றும் டெங்கு 

இவை இரண்டுமே, கொசுவினால் பரவும் வைரஸ் நோய்களாகும் அவற்றின் உயிரிகள் ஏடிஸ் கொசுக்களின் இனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 
ஒரே மாதிரியான அதிக காய்ச்சல், தலைவலி, மூட்டுகள் மற்றும் கண்களில் வலி, தடிப்புகள் மற்றும் தூக்க மயக்கம் போன்ற அறிகுறிகள் இவை இரண்டிற்கும் பொதுவானது என்பது கூடுதல் தகவல். இந்த  இரண்டு வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் பொது வைரல் காய்ச்சல் அல்லது மலேரியா காய்ச்சல் என தான் முதலில் நினைக்க தோன்றும். 

ஆனால் இதற்கான சரியான முறையில் ரத்த பரிசோதனை செய்து நோயின் தன்மையை உறுதி செய்துகொண்டு அதற்கான சரியான சிகிச்சையை சரியான சமயத்தில் எடுத்துக்கொள்வது நல்லது.