பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்வது காவல்துறை. ஆனால் கடந்த சில வருங்களாக பாதுகாப்பாக விளங்க வேண்டிய காவல்துறை அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பெயருக்கும் மட்டும்தான் காவல்துறை உங்கள் நண்பன் என்பார்கள். ஆனால் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் குடும்பத்தின் தந்தை போன்று போற்றப்படுகிறார் சென்னை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

கடந்த ஏப்ரல் 17-ம் தேதி இரவு, அண்ணாநகர் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் அமுதாவிடம் வந்த ஒரு நோயாளி நடத்தி அவர் கழுத்தில் இருந்த 10  சவரன் நகையை பறித்து கொண்டு ஒடினான். இதனால் அதிர்ச்சியில் கூச்சலிட்டப்படியே வெளியே வந்தார். அவ்வழியாக வந்த சிறுவன் சூர்யா தனியொருவனாக விரட்டி சென்று அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தான். இந்த சிறுவனுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் பாராட்டுகள் குவிந்தது. 

 திருடன் துணிச்சலாக விரட்டிப்பிடித்த சிறுவன் சூர்யா(17) பற்றிய செய்தியை அறிந்து அழைத்து தனக்கு பக்கத்து சீட்டில் அமர வைத்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ரிவார்டு வழங்கி பாராட்டினார்.  அப்போது தனியார் நிறுவனத்தில் எனக்கு ஒரு வேலை தாங்கி தரும்படி கோரிக்கை வைத்திருந்தார். அப்போது சூரியாவுக்கு 17 வயது என்பதால், எங்குமே வேலை வாங்கி தரமுடியாது என ஆணையர் நினைத்தார்.ஆனாலும் சூர்யா கேட்ட உதவியை மறக்காத சென்னை ஆணையர் தற்போது சூர்யா 18 வயதை கடந்தவுடன், டிவிஎஸ் நிறுவனத்தில் சிபாரிசு செய்து ஏசி மெக்கானிக் வேலைக்கு ஏற்பாடு செய்து தந்துள்ளார். ஷூ அணிந்து வேலைக்கு போக வேண்டும் என்பது எனது கனவு, ஆனால் அது நடக்கவே இல்லை. இன்று ஷூ, யூனிபார்ம் அணிந்து பணிக்கு செல்கிறேன் எனது கனவு நிறைவேறியது என்று சிறுவன் சூர்யா நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.