துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க 4 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் புறப்பட்டு சென்றுள்ளார். 

துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க 4 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் புறப்பட்டு சென்றுள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து தமிழகத்தில் தொழில் துறையில் முன்னேற்றம் அடைவதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதைப்போன்று பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 192 நாடுகள் பங்கேற்கும் துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக இந்த மாதம் இறுதியில் கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று, தமிழகம் சார்பில் துபாய் கண்காட்சியில் அரங்கம் அமைக்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றார்.

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் பூங்கொத்துகள், சால்வைகள் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். துபாயில் 4 நாள் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க அமீரக தமிழர்கள் சார்பில் பல்வேறு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவருடன் உயர் அதிகாரிகள் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். அங்கு சில தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை முடித்துக் கொண்டு வரும் 28 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக கைத்தறி, விவசாயம், தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்கு அமைய உள்ளது. தமிழ்நாடு சார்பாக அமைக்கப்பட உள்ள காட்சி அரங்கில் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலீட்டை ஈர்க்க முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் செல்கிறார். துபாய்யில் இந்த மாதம் 192 நாடுகள் சார்பாக மாபெரும் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கான தொழில் முதலீட்டை ஈர்க்கும்பொருட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார். கண்காட்சியில் தமிழகம் சார்பிலும் ஒரு அரங்கு அமைக்கப்படும் என்றும் அதில், கைத்தறி, விவசாயம், சிறு தொழில் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் வகையில் அந்த அரங்கம் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.