Asianet News TamilAsianet News Tamil

"நீங்கள் நலமா?" முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக உங்களுக்கு போன் செய்யப்போகிறார்.? எப்போ தெரியுமா.?

தமிழ அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்கிறதா.? என்பதை அறிந்து கொள்ளும் வகையில் நீங்கள் நலமா.? என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கவுள்ளார்.

Chief Minister Stalin will launch the Neengal Nalama program today KAK
Author
First Published Mar 6, 2024, 9:48 AM IST | Last Updated Mar 6, 2024, 9:53 AM IST

தமிழக அரசின் திட்டங்கள்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மக்களை தேடி மருத்துவம்', 'இல்லம் தேடி கல்வி', 'உங்கள் ஊரில் கலெக்டர்' , கலைஞர் மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண்  திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் பயன்கள் எல்லாம் உரிய மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா? என்பதை உறுதி செய்வதற்கு ஒரு புதிய திட்டத்தை  இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

Chief Minister Stalin will launch the Neengal Nalama program today KAK

தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் ஸ்டாலின்

அந்த திட்டத்தோட பெயர் "நீங்கள் நலமா?" இந்த நீங்கள் நலமா திட்டத்தின் மூலமாக முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள், துறையின் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் என பொதுமக்களை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்க உள்ளனர். முதற்கட்டமாக நலத் திட்டங்கள் பற்றியும், அடுத்த கட்டமாக அரசு துறைகளில் வழங்கப்படுகிற சேவைகள் பற்றியும், கருத்துக்கள் பெற்று அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இதையும் படியுங்கள்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios