கோவில்பட்டி மெயின் ரோடில் பிரபல சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை அமைந்தள்ளது மூன்று மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீரென தீப்படித்தது. இதையடுத்து  அனைத்துப் பகுதிகளுக்கு தீ வேகமாகப் பரவியது. 

இதனால் அடுத்தடுத்த தளங்களும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக 10 கோடி ரூபாய்  மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை தி.நகரில் உள்ள இதே சென்னை சில்க்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.