சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவனுக்கு செக்ஸ் டார்ச்சர் செய்வதாக அதே பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியையாக பணியாற்றிய ஸ்மிதா என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு முகப்பேரில் செயல்பட்டு வரும் வேலம்மாள் பள்ளிக்கூடம் அந்த பகுதியில் மிகவும் பிரபலமானது. 

ப்ரீ கேஜி முதல் 12ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் உள்ளது. ஸ்மிதா என்பவர் இந்த வேலம்மாள் பள்ளிக்கூடத்தில் கம்ப்யூட்டர் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது 12ம் வகுப்பில் கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவு எடுத்து படித்து வரும் 17 வயது மாணவன் ஒருவன் கம்ப்யூட்டர் லேபுக்கு வரும் போது ஆசிரியை ஸ்மிதா உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியை என்பதால் அந்த மாணவனும் தயக்கம் இன்றி ஸ்மிதாவுடன் பழகி வந்துள்ளான். ஒரு கட்டத்தில் ஆசிரியை மாணவனின் செல்போன் எண்ணை வாங்கி வாட்ஸ் ஆப் சேட்டிங் செய்துள்ளார். 

பின்னர் செல்போனிலும் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்துள்ளார். இவர்களின் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் மாணவனின் பெற்றோர் செல்போனை எதேச்சையாக எடுத்து பார்த்துள்ளனர். அப்போது ஆசிரியை ஸ்மிதா மாணவனுடன் ஆபாசமாக சேட் செய்தது தெரியவந்தது. மேலும் ஆசிரியை ஸ்மிதா தனது அந்தரங்க புகைப்படங்களையும் மாணவனுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

இதனை பார்த்து பதறிப்போன மாணவனின் பெற்றோர் உடனடியாக வேலம்மாள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். மாணவனின் செல்போனை பார்த்து அதிர்ந்து போன பள்ளி நிர்வாகமும் உடனடியாக ஆசிரியை ஸ்மிதாவை காதும் காதும் வைத்தது போல் பள்ளிக்கூடத்தில் இருந்து விரட்டியுள்ளனர். ஆனாலும் ஆசிரியை ஸ்மிதா தொடர்ந்து செல்போன் மூலம் மாணவனுடன் பேசி வந்துள்ளார். 

பல முறை கூறியும் ஆசிரியை கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மாணவனை அழைத்துக் கொண்டு எஸ்கேப் ஆக ஆசிரியை ஸ்மிதா திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 17வயதே ஆன தங்கள் மகனுக்கு 40 வயதான ஆசிரியை ஸ்மிதா செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக பெற்றோர் கொடுத்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார்  ஆசிரியையை தேடி வருகின்றனர்.