வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  அதேபோல் கடலோர தமிழகம், மற்றும்  பண்டிச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் இவ்வறு தெரிவித்துள்ளார். வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார் . மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக சூறைக்காற்று மணிக்கு 40முதல் 50கிலோ மீட்டர் வேகத்தில் வீசிவருவதால் குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மீனவர்கள் இன்றும் நாளையும்  கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல்  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் கடவூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 2செ.மீமழைபதிவாகி உள்ளது. 

அதே போல்  மாலத்தீவு, மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் அங்கு மீனவர்கள் நாளை கடலுக்கு மீன் பிடிகுக் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது . சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது . அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிர் செல்சியஸாகவும்,  குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸகவும் பதிவாகியுள்ளது.