சபரிலையில் மண்டல பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான பர்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில்தான் அனைத்து வயதுப் பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஒரு சில பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் வர முயற்சி செய்தனர். ஆனால் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று கூட கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. நேற்று பெண்ணியவாதி திருப்தி தேசாய் அய்யப்பன் கோவலிலுக்கு செல்வதற்காக கொச்சி வந்தார். ஆனால் அவரை விமான நிலையத்தை விட்டு செல்லவிடாமல் பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து சபரிமலையில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு 144 தடை உத்தரவும் போடப்பட்டடுள்ளது.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் மண்டல பூஜைக்கான நேற்று அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து இனி கோவிலுக்கு மாலை அணிந்து வரும் பக்தர்கள் வரத் தொடங்குவார்கள்.

இந்நிலையில் இன்ற கார்த்திகை 1ஆம் தேதி, அதுவும் சனிக்கிழமை. இது அய்யப்பனுக்க உகந்த நாளாக கருதப்படுகிறது. இதனால் அன்று சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை செல்வதற்காக இன்று மாலை அணிந்து கொண்டனர்.