Asianet News TamilAsianet News Tamil

சென்னை – கொல்லம் இடையே புதிய விரைவு ரயில் !! அதுவும் மதுரை வழியாக !! கொண்டாட்டத்தில் தென் மாவட்ட மக்கள் !!

சென்னையில் இருந்து மதுரை வழியாக கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் விடப்படுகிறது. இந்த ரெயிலை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் இன்று தொடங்கி வைக்கிறார்.
 

chennai kollam new train via madurai
Author
Chennai, First Published Mar 4, 2019, 10:07 AM IST

தென் மாவட்ட மக்களைக் கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற இடங்களுக்கு  புதிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் மதுரை – சென்னை இடையே தேஜஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

chennai kollam new train via madurai

இந்நிலையிவ்  சென்னை எழும்பூரில் இருந்து  மதுரை  வழியாக கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரெயில் விடப்படுகிறது. இந்த ரெயில் திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சபரிமலைக்கு செல்லும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் 

chennai kollam new train via madurai

இந்த ரெயில் (எண்.16101)  நாள்தோறும் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில், எண்.16102 ரெயில், கொல்லத்தில் இருந்து நாள்தோறும்  காலை 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

தர்மபுரி ரெயில் நிலையத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும்  விழாவில் காணொலி காட்சி  மூலம் அமைச்சர்  பியூஸ் கோயல் சென்னை எழும்பூர்-கொல்லம் விரைவு ரெயிலை பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

chennai kollam new train via madurai

தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிற அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.16191), நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. இதேபோல மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு (எண்.16192), மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

chennai kollam new train via madurai

நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ள ரெயில் நேரம் தொடர்பான புதிய அட்டவணை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. இந்த  அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலையும், அமைச்சர்  பியூஸ் கோயல் பச்சைக்கொடி அசைத்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார். இதேபோன்று மொரப்பூர்-தர்மபுரி இடையேயான புதிய வழித்தடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios