தமிழக காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் 10% அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும் திறமையற்றவர்களாவும் உள்ளதாக வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊழல் அதிகாரிகளை களைந்து , திறமையற்றவர்களுக்கு பயிற்சி வழங்க அறிவுறுத்தியுள்ளது.
நில விற்பனை தொடர்பாக புகாரில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறு விசாரணை நடத்தாமலே நாமக்கல் மாவட்ட குற்றபிரிவு ஆய்வாளர் வழக்கை முடித்து வைத்ததாக சாந்தி என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடந்தார். இதன் விசாரனையில் தவறு செய்திருப்பதாக கருதினால் மன்னிப்பு கோருவதாக ஆய்வாளர் தாக்கல் பதில்மனுவை ஏற்ற நீதிபதி, உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை என்று வழக்கை முடித்து வைத்தார்.
மேலும் நிலத்தை விற்றவர் உயிருடன் இருந்தபோதே விசாரித்திருந்தால் முழு உண்மை தெரியவந்திருக்கும் என்ற நீதிபதி காவல்துறையில் 10 % அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாக உள்ளதாக குறிப்பிட்டார்.தமிழக காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாகவும் ஊழல் அதிகாரிகளை களைந்து , திறமையற்றவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்று அதிருப்தி தெரிவித்தார்.