Asianet News TamilAsianet News Tamil

நளினியை முன்கூட்டியே விடுவிக்கும் விவகாரம்… தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தம்மை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக நளினி தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chennai high court order Nalini case
Author
Chennai, First Published Oct 1, 2021, 6:52 PM IST

சென்னை: தம்மை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக நளினி தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chennai high court order Nalini case

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்த தீர்மானம் அதே மாதம் 11ம் தேதி ஆளுநரின் பரிந்துரைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந் நிலையில் இந்த பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதாகவும் தீர்மானம் நிறைவேறிய மறுநாள் முதல் தம்மை சட்ட விரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதால் விடுவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

Chennai high court order Nalini case

நளினி வழக்கின் போது நடைபெற்ற விசாரணையில் இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசு தீர்மானம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில் நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி தான் முடிவெடுக்க முடியும் என்று அதில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios